16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு
16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் மாகாணத்தில் 3.3 அடி நீளம் கொண்ட டைனோசரின் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது.

பூமியில் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பெரிய விண்கல் மோதியதில் பல்வேறு உயிரினங்கள் மொத்தமாக அழிந்துபோயின. அதில் குறிப்பிடத்தக்க ஒரு உயிரினம் டைனோசர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான டைனோசர் விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்படுகிறது. விண்கல் விழுந்த போது தப்பித்து, அதன்பின் சில காலத்தில் தட்பவெப்ப மாற்றம் காரணமாக பலியான டைனோசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் இப்போதும் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை பல டைனோசர்களின் எலும்புகள், மண்டை ஓடுகள், கால்தடங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இந்த இனம் அழிந்தது எப்படி என்ற தீவிர ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இச்சூழலில் இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷயர் மாகாணத்தில் 3.3 அடி நீளம் கொண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கடற்கரை ஏற்கனவே உள்ளூர் மக்களால் 'டைனோசர் கடற்கரை' என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய தொல்லியல் ஆய்வாளர்கள், தற்போது இங்கே கண்டெடுக்கப்பட்டது டைனோசரின் இடது கால் தடம் என்றும், அதன் அளவு 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இந்த உயிரினம் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கக் கூடும் என்றும் தெரிவித்துள்ளர். மேலும், கண்டெடுக்கப்பட்ட டைனோசரின் கால்தடம் அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் யார்க்ஷயர் மாகாணத்தில் ஒருகாலத்தில் டைனோசர் வாழ்ந்திருப்பதாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்த நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் தற்போது டைனோசரின் கால் தடம் கிடைத்திருப்பது டைனோசர் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com