அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அலுவலகத்துக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் ரடீ லபீப் பிரின்ஸ். ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்ட இவரும் அந்த அலுவலகத்தில் பணியாற்றியவர் என்று அங்குள்ள போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வராத நிலையில், மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது அமெரிக்க மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.