திருமணம் நடந்து முடிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே, திருமண ஜோடி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸால் பகுதியைச் சேர்ந்தவர் ஹார்லி மோர்கன் (19). இவர் தனது தோழி பவுட்ரியாக்ஸை (20) காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன், அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அதற்கான பதிவில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்தனர். பார்க்கிங்கில் இருந்து காரில் ஏறினர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் நான்கைந்து முறை உருண்டது. இதனால் திருமணம் செய்து கொண்ட ஜோடி, குடும்பத்தினர் கண்முன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோர்கனின் அம்மா லஷாவ்னா கூறும்போது, ‘’திருமணத்துக்கு வாழ்த்த வந்தேன். அவர்கள் இறப்பதை பார்க்க வேண்டிய தாகி விட்டது. அந்த குழந்தைகளுக்கு நிறைய கனவு இருந்தது. எல்லாம் போய் விட்டது’’ என்று கண்ணீர் விட்டார்.
இந்த சம்பவம் அவர்கள் உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.