மார்க் ஜூக்கர்பெர்க்
மார்க் ஜூக்கர்பெர்க் முகநூல்

’பல கோடிப்பு..’ மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்த அதிரடி முடிவு... ஆடிப்போன ஊழியர்கள்!

நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்கவும் மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார்.
Published on

பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து, இஷ்டப்பட்டோ.. கஷ்டப்பட்டோ அதையும் முடித்து, ஒரு வழியாக பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தால்.. அந்த நிறுவனத்தில் நிரந்தரமாக வேலை பார்ப்பது என்பது கேள்விக்குறியாகவே வந்து நின்றுவிடுகிறது. சமீபகாலமாக பெயர் போன பெரிய நிறுவனங்களில்கூட ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.

இந்தவகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸ்அப் போன்றவற்றின் தாய் அமைப்பான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க்கும் அத்தகைய முடிவை எடுத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராம், முகநூல் செயலிகளில் பணிப்புரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் டாலர்.. இந்திய மதிப்பில் ரூ.4.32 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள் அதிகரித்துவரும் சூழலில், பலர் வேலையை இழக்க நேர்கிறது. செலவினத்தைக் குறைக்கும் வகையிலும், செய்யும் வேலையைத் துரிதப்படுத்தும் வகையிலும் இந்தப் பணிநீக்கம் நடைபெறுவதாகவும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மார்க் ஜூக்கர்பெர்க்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. விமானம் மூலம் கொட்டப்படும் பிங்க் நிற ரசாயனம் - என்ன அது?

மேலும், மெட்டா நிறுவனத்தில் நன்றாக வேலை செய்யாத 3,600 ஊழியர்களை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய ஊழியர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மார்க் ஜூக்கர்பெர்க்,

”புதிய ஊழியர்களை உள்ளே கொண்டு வருவதற்காகவும், அசாத்திய திறமைசாலிகளைக் கொண்ட நிறுவனமாக உருவாக்கவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 21,000 பேரை மெட்டா வேலையை விட்டு நீக்கியிருந்தது. அதாவது எனது நிறுவனத்தில் 25 சதவீதம் பேரை அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் செயல்திறனின் அடிப்படையில் பணி நீக்கம் செய்வது தொடர்கிறது. “ என்று அறிவித்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்
”இயற்கை மாறுவதற்கு முன் நாம் மாற வேண்டும்” - மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முத்தமிழ்செல்வி பேட்டி

இந்த ஆண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளது மெட்டா நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com