இர்மாவை தொடர்ந்து மரியா புயல்: கலக்கத்தில் கரீபியன் தீவுகள்

இர்மாவை தொடர்ந்து மரியா புயல்: கலக்கத்தில் கரீபியன் தீவுகள்
இர்மாவை தொடர்ந்து மரியா புயல்: கலக்கத்தில் கரீபியன் தீவுகள்

இர்மாவை தொடர்ந்து உருவாகியுள்ள மரியா புயல், சூறாவளியாக மாறி கரீபியன் தீவுகளை தாக்கக்கூடும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன் அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய இர்மா புயல் கரீபியன் தீவுகளை கடுமையாக பாதித்ததுடன், அமெரிக்காவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றது. இதனால் பார்புடாலில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்து, பெருவாரியான மக்கள் வீடுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதன் பாதிப்பில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும் என்று அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் இர்மாவை போன்றே மரியா என்ற புயல் உருவாகியுள்ளதால், அதுவும் சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்றாய் மாறி கரீபியன் தீவுகளை பாதிக்கும் என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காற்று அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுப்பெற்று, இன்று இரவிற்கு மேல் லீவர்ட் தீவுகளை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டோமானிக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் செயிண்ட் மார்ட்டென் போன்ற பகுதிகளில் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com