உலகம்
பாக்.கில் ஆயிரக்கணக்கான பொம்மை துப்பாக்கிகள் பறிமுதல்
பாக்.கில் ஆயிரக்கணக்கான பொம்மை துப்பாக்கிகள் பறிமுதல்
பாகிஸ்தானின் கராச்சி நகர சந்தையில் ஆயிரக்கணக்கில் பொம்மை துப்பாக்கிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொம்மை துப்பாக்கிகளுடன் உள்ளூர் ரவுடிகள் குற்ற செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பொம்மை துப்பாக்கிகளை விற்க, அம்மாகாண நிர்வாகம் இரண்டு மாதங்கள் தடை விதித்தது. தடையை மீறி பொம்மை துப்பாக்கிகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து, கராச்சி நகரின் போல்டன் சந்தை மற்றும் சக்கிவாரா பகுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பொம்மை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.