நாயின் வாயை கட்டி போட்ட உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாயின் வாயை கட்டி போட்ட உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை
நாயின் வாயை கட்டி போட்ட உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவில் நாயின் வாயை கட்டிபோட்ட அதன் உரிமையாளருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வில்லியம் டோட்சன் என்பவர் தான் வளர்த்து வந்த நாயின் வாயை கட்டிபோட்டு கொடுமைபடுத்தியதற்காக அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வில்லியம் டோட்சன் வளர்த்து வந்த கேட்லின் என்ற நாய் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அடிக்கடி குறைத்து தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாயின் வாய்ப்பகுதியை பிளாஸ்டிக் டேப்பினால் இறுக்கமாக கட்டிப்போட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அதன் வாய் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு காயத்தால் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, கேட்லின் உரிமையாளரிடமிருந்து தப்பி தென் கரோலினா தெருக்களில் அலைந்து கொண்டிருந்தது. அதனை கண்ட நாய் மீட்புக்குழுவினர் கேட்லினுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 36 மணி நேரங்கள் சிகிச்சை அளித்தப் பின்னரே அது இயல்பு நிலைக்கு திரும்பியது.

கேட்லின் வாய் இறுக்கமாக கட்டியதால் தலைக்கு ரத்த ஓட்டம் செல்லாமல் பெரும் அவதியுற்றது சிகிச்சையில் தெரிய வந்துள்ளது. வளர்ப்பு நாயை கொடூரமாக சித்ரவதை செய்த உரிமையாளர் மீது வடக்கு சார்லஸ்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து, நாயை கொடுமை படுத்தியதற்காக விலங்குவதை தடுப்புச்சட்டத்தின் கீழ் உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மார்க்லே டென்னிஸ் தீர்ப்பளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com