“ரொம்ப சிரமம் தான்” - ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்

“ரொம்ப சிரமம் தான்” - ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்

“ரொம்ப சிரமம் தான்” - ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ வித்தியாசமாக முயற்சித்த டிக்டாக் பிரபலம்

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே என்பவர் கர்ப்பிணி பெண் போல ஒருநாள் வாழ ஆசைப்பட்டு படுக்கையில் இருந்து எழ முடியாமல் அவதிப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் பேறு காலம் என்பது வாழ்வில் மறக்க முடியாத அழகான நாட்கள்தான். ஆனாலும் பேறு கால மாதங்களில் பெண்கள் கடுமையான சிரமங்களையும் அனுபவிப்பார்கள். பேறு காலத்தில் பெண்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். பல பெண்கள் அதிக எடை கூடுவார்கள். பேறு காலத்தின் 9 ஆவது மாதத்தில் சாதாரண வேலைகளை கூட செய்ய முடியாமல் சிரமங்களை அனுபவிப்பார்கள். த

இதையெல்லாம் குறித்து ஆழ்ந்து யோசித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மெயிட்லாண்ட் ஹான்லே ஒரு நாள் கர்ப்பிணியாக வாழ ஆசைப்பட்டுள்ளார். அதுவும் 9 மாத கர்ப்பிணியாக அவர் வாழ விருப்பப்பபட்டுள்ளார். இதற்காக ஒரு பெரிய தர்பூசிணியை தன் வயிற்றில் இருக்கமாக கட்டிக்கொண்டார். பேறு காலங்களில் பெண்களுக்கு மார்பகங்களும் பெரிதாகும் என்பதால் சிறிய தர்ப்பூசிணி பழங்களையும் தன்னுடைய நெஞ்சில் வைத்து பிளாஸ்டிக் பிளாஸ்திரிகளால் இருக்கமாக கட்டி விட்டார்.

பின்பு கர்ப்பிணிகளை போல தன்னைத்தானே பாவித்துக்கொண்ட ஹான்லே படுக்கையில் படுத்துக்கொண்டார். அதன் பின்பு படுக்கையில் இருந்து எழுந்திருக்க அவர் முயன்றபோதும் அவரால் முடியவில்லை. உண்மையிலேயே கர்ப்பிணியாக இருப்பது மிகவும் சிரமம்தான் என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் ஹான்லே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com