\
மனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி பயணித்த கணவன்: அன்பா? சுயநலமா? அனல்பறந்த விவாதம்

மனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி பயணித்த கணவன்: அன்பா? சுயநலமா? அனல்பறந்த விவாதம்

மனைவிக்காக 6 மணிநேரம் நின்றபடி பயணித்த கணவன்: அன்பா? சுயநலமா? அனல்பறந்த விவாதம்
Published on

விமானத்தில் பயணித்த மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவரின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

கடந்த சில நாட்களுக்கு முன், கர்ட்னி லீ ஜான்சன் என்பவர் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அதில் விமானத்துக்குள் ஒருவர் நின்றுகொண்டிருக்க, அருகில் பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருக்கிறார். ’மனைவி நன்றாக தூங்க வேண்டும் எனபதற்காக இந்த மனிதர் 6 மணி நேரமாக நின்றுகொண்டே வருகிறார். இதுதான் உண்மையான அன்பு’ என்று கேப்ஷன் கொடுத்திருந்தார் ஜான்சன். அது எந்த விமானம், எங்கிருந்து எங்கு சென்றது என்ற விவரம் ஏதுமில்லை. 

இதையடுத்து மனைவி மீது அவர் வைத்திருந்த அன்பை பாராட்டி பலர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தப் புகைப்படம் சுமார் 16 ஆயிரம் லைக்குகளையும் சுமார் 3500 ரீட்விட்டுகளையும் பெற்றது. 

ஒரு பக்கம் கணவரின் அன்பை சிலர் பாராட்டினாலும் மறுபக்கம் அவர் மனைவி சுயநலம் கொண்டவர் என்று திட்டத் தொடங்கிவிட்டனர் ட்விட்டர்வாசிகள். பின்னர் அன்பா, சுயநலமா என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com