\
கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீரத்துடன் மீட்ட நபர்: வைரல் வீடியோ

கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீரத்துடன் மீட்ட நபர்: வைரல் வீடியோ

கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியை தீரத்துடன் மீட்ட நபர்: வைரல் வீடியோ
Published on

கடுங்குளிரான ஆற்றுக்குள் விழுந்த மூதாட்டியைக் காப்பாற்றியவரை சீன ஊடகங்கள் மற்றும் இணையதளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.

வட சீனாவில் உள்ள ஹெபேய் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷி லெய் என்ற 54 வயது நபர், தமது சைக்கிளை ஓட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பாதி உறைந்துபோன ஆற்றுக்குள் 70 வயது மூதாட்டி விழுந்ததை பார்த்துள்ளார்.

மற்ற வழிப்போக்கர்கள் காவல்துறையினரை அழைத்த நேரத்தில் ஷி லெய், உறைந்த ஆற்றின் மேல் ஊர்ந்து சென்று மூதாட்டியை வெளியே இழுக்க முயன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. சற்று நேரத்திற்கு பிறகு, மற்றொருவர் ஷி லெய்க்கும் மூதாட்டிக்கும் உதவ வந்தார். ஷி லெய் ஆற்றுக்குள் விழாதவாறு அந்த நபர், சட்டையைப் பிடித்துக் கொண்டார். அத்துடன், அனைவரும் பாதுகாப்பாக ஆற்றைவிட்டு வெளியே செல்வதற்காக அவர் மரப்பலகை ஒன்றையும் பயன்படுத்தினார். இந்த சம்பவத்தை இணையதளவாசிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com