"I love you as a friend" - காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோழன்

"I love you as a friend" - காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோழன்
"I love you as a friend" - காதலை ஏற்க மறுத்ததால் தோழியிடம் ரூ.24 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோழன்

நீண்ட நாள் தோழி தன்னுடைய காதலை ஏற்க மறுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் 24 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

காவ்ஷிகன் என்பவரும் நோரா டான் என்ற பெண்ணும் கடந்த 2016ம் ஆண்டுதான் முதல் முதலாக சந்தித்திருக்கிறார்கள். நண்பர்களாக இருவரும் பழகி வந்த நேரத்தில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் வர 2020ம் ஆண்டு வாக்கில் நோராவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் காவ்ஷிகன்.

நோராவோ இந்த உறவை நட்பாக மட்டுமே பார்த்திருக்கிறார். ஆனால் காவ்ஷிகனுக்கோ நோரா மீது தனக்கு இருக்கும் காதல் உணர்வில் இருந்து மீள முடியாமல் இருந்திருக்கிறார். இப்படியாக இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் இருவருக்கும் இடையே பிரச்னை தொடங்கியிருக்கிறது.

அப்போதும் நோரா காவ்ஷிகனை வெறும் நண்பனாக மட்டுமே பார்க்க, காவ்ஷிகனோ நோராதான் தனக்கு எல்லாம் என்பதை போல இருந்திருக்கிறார். இருப்பினும் தன்னுடைய காதலை ஏற்க மறுத்து உணர்வு ரீதியாக கொடுமைப்படுத்துவதாக எண்ணி நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல் காவ்ஷிகன் முடிவெடுத்திருக்கிறார்.

பின்னர் இருவரும் மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்ல முடிவெடுத்ததால் சட்ட நடவடிக்கையை காவ்ஷிகன் கைவிட்டிருக்கிறார். அப்போது, ஒன்று என் விருப்பத்துக்கு இணங்க வேண்டும் அல்லது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்ற முடியாத சேதாரத்தை அவர் சந்திக்க வேண்டும் என காவ்ஷிகன் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து ஒன்றரை ஆண்டுக்கு நோராவும், காவ்ஷிகனும் மருத்துவ ஆலோசனையை தொடர்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் காவ்ஷிகனிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதனால் அவரிடம் இருந்து நோரா தள்ளியிருக்க தொடங்கியிருக்கிறார்.

நோராவின் இந்த செயல் காவ்ஷிகனுக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்க நோரா மீது காவ்ஷிகன் இரண்டு வழக்குகளை தொடுத்திருக்கிறார். அதன்படி தனக்கு மன அழுத்தங்களுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கியதற்காகவும், என்னுடைய தொழில் வாழ்க்கையை சிதைத்ததற்காகவும் 3 மில்லியன் டாலர் (24 கோடி ரூபாய்) இழப்பீடு கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார் காவ்ஷிகன். 

இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு முந்தைய விசாரணை வருகிற பிப்ரவரி 9ம் தேதி நடத்தப்படும் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com