சிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி!

சிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி!

சிறையிலிருந்து தப்பித்து 17 வருடங்களாக குகையில் வாழ்ந்த கைதி!
Published on

போலீசாரிடம் இருந்து தப்பித்து 17 வருடங்களாக காட்டுவாசி போல் குகையில் வாழ்ந்து வந்த கைதியை போலீசார் கைது செய்தனர்

பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியதாக  சாங் சியாங் என்பவரை கடந்த 2002ம் ஆண்டு சீன காவல்துறை கைது செய்தது. சிறையில் இருந்த சாங், திட்டமிட்டு தப்பித்தார். பின்னர் பல இடங்களில் தேடியும் சாங்கை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 17 வருடங்களுக்கு பிறகு சாங்கை மலைகளுக்கு நடுவே உள்ள குகையில் போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் பறக்கவிட்ட ட்ரோன் கேமராவில் சிக்கிய சில தடயங்கள் மூலம் தலைமறைவாக இருந்த கைதி கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்

மலைகளுக்கு நடுவே உள்ள குகையை வீடாக பயன்படுத்திய சாங், ஆற்று நீரை தண்ணீருக்காக பயன்படுத்தியுள்ளார். காட்டில் உள்ள பொருட்களை உணவுக்காக பயன்படுத்தியுள்ளார். காட்டு மரங்களை வெட்டி நெருப்பை உண்டாக்கி சமைத்து சாப்ப்பிட்டு ஒரு காட்டுவாசி போலவே வாழ்ந்து வந்துள்ளார் சாங். மனிதர்களிடம் இருந்தே தனித்து காட்டுமனிதனாகவே மாறி ஒளிந்து வந்த சாங்கை போலீசாரின் ட்ரோன் கேமரா கண்டுபிடித்தது.

காட்டுப்பகுதியில் பறக்கவிட்ட ட்ரோன் கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்த போது மலைகளுக்கு நடுவே உள்ள குகையில் சில பொருட்கள் இருப்பதாக தெரிந்தது. மலைகளுக்கு நடுவே மனிதர் தங்கி இருப்பதற்கான பொருட்கள் இருப்பதை போலீசார் நேராக அந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த சாங் பிடிபட்டார். 17 வருடங்களுக்கு பிறகு பிடிபட்ட சாங்கை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com