\
கடலில் 56 நாட்கள் உணவு, குடிநீரின்றி போராடி கரைசேர்ந்த இளைஞர்

கடலில் 56 நாட்கள் உணவு, குடிநீரின்றி போராடி கரைசேர்ந்த இளைஞர்

கடலில் 56 நாட்கள் உணவு, குடிநீரின்றி போராடி கரைசேர்ந்த இளைஞர்
Published on

பிலிப்பைன்ஸ் அருகே கடலில் உணவு, குடிநீரின்றி 56 நாட்கள் வாழ்ந்த மீனவர் உயிருடன் கரை திரும்பினார்.

பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் சாண்டோஸ் நகரக் கடற்கரையிலிருந்து கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 21ல் ரோலண்டோ ஓமங்கஸ் எனும் 21 வயது மீனவர், தனது உறவினரான ரெனியல் ஓமங்கஸுடன் சேர்ந்து பசிபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. கடலில் ஏற்பட்ட எதிர்பாரா புயலில் சிக்கிய அவர்களது படகு, சிதைந்தது. இதனால் உணவு, குடிநீரின்றி கடலில் அவர்கள் தத்தளித்தனர். இந்த போராட்டத்தில் உறவினர் ரெனியல் மரணிப்பதைக் கண்ட ரோலண்டோ, 56 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் கரையொதுங்கினார். கடலில் தத்தளித்த நாட்களில் மழைநீரையே குடிநீராகப் பயன்படுத்தி வாழ்ந்ததாக உயிர்பிழைந்துள்ள ரோலண்டோ தெரிவித்தார். உடல் கடுமையான சோர்வடைந்த நிலையில் கடந்த 9ம் தேதி கரைசேர்ந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com