பெண்ணை சுட்டவரையே கொன்ற துப்பாக்கி குண்டு.. எப்படி சாத்தியம்? டெக்ஸாசில் நடந்த பகீர்!

பெண்ணை சுட்டவரையே கொன்ற துப்பாக்கி குண்டு.. எப்படி சாத்தியம்? டெக்ஸாசில் நடந்த பகீர்!
பெண்ணை சுட்டவரையே கொன்ற துப்பாக்கி குண்டு.. எப்படி சாத்தியம்? டெக்ஸாசில் நடந்த பகீர்!

ஆக்‌ஷன் படங்களில் ஹீரோவை நோக்கி வில்லன் தாக்கும் போது அது மீண்டும் வில்லனை நோக்கியே தாக்குவது போல காட்சிகள் இருக்கும். இப்படியெல்லாம் உண்மையில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை.

சினிமாக்களில் வேண்டுமானால் ட்ரிக் செய்ய வைக்கலாம் என நினைக்கலாம். ஆனால் நிஜமாகவே இப்படியான சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடந்திருக்கிறது. அதன்படி டெக்ஸாசில் கடந்த சனிக்கிழமையன்று பெண்ணை கொல்ல அவரது கழுத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் மீதே அந்த குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார்.

டெக்ஸாசின் டல்லாஸ் பகுதியில் உள்ள மெடிக்கல் மாவட்டத்தில் 26 வயதான ப்ரையன் ரெட்மான் என்ற நபர் அதேப்பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். அந்த குண்டு பெண்ணின் கழுத்தில் பாய்ந்து, அவர் கத்தத் தொடங்கியிருக்கிறார். இதனால் அதே குண்டு ரெட்மானின் காலில் பாய்ந்திருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் அபார்ட்மெண்ட் இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு எவரும் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவ்விடத்தில் நோட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அருகே இருந்த பார்க்லேண்ட் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.

அங்கு ரெட்மானும் அந்த பெண்ணும் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரெட்மான் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் படத்தை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

இந்த ஜோடி தெரிந்தவர்கள்தானா அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒற்றிய சூழ்நிலைகள் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அப்பார்ட்மெண்ட்டை சுற்றிய பகுதிகளில் ரத்தக்காயம் இருந்தது, பெண்ணின் கழுத்தில் ஏற்பட்டுள்ள காயம் மற்றும் ரெட்மானின் கால் காயத்திற்கு அதே புல்லட் காரணம் என்பது டல்லாஸ் போலீசாருக்கு தெளிவடையச் செய்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com