\
விமானத்தில் இருந்து குதித்த வாலிபர்: தடுத்த பணிப்பெண்ணுக்கு கடி

விமானத்தில் இருந்து குதித்த வாலிபர்: தடுத்த பணிப்பெண்ணுக்கு கடி

விமானத்தில் இருந்து குதித்த வாலிபர்: தடுத்த பணிப்பெண்ணுக்கு கடி
Published on

அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வாலிபர் ஒருவர் குதிக்க முயன்றுள்ளார். அப்போது அவரை தடுக்க முயன்ற விமான பணிப்பெண்ணை அவர் கடித்து|ள்ளார்.|

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் சாட்லோட் டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் டன்லான்சின் என்ற 22 வயது வாலிபர் பயணம் செய்ய இருக்கையில் அமர்ந்திருந்தார்.

விமானம் புறப்பட தயாராக இருந்த நிலையில் அவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்தார். பின்னர் விமானத்தின் மெயின் கதவை திறக்க முயன்றார். உடனே விமான பணிப் பெண் அவரை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சின் அவரை கடித்தார். பிறகு மற்றொரு கதவை திறந்து ஓடுதளத்தில் குதித்து ஓட தொடங்கினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி பிடித்தனர். இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com