உலகப்புகழ் பெற்ற "தி கிஸ்" புகைப்படத்தில் இடம்பெற்றவர் காலமானார் !

உலகப்புகழ் பெற்ற "தி கிஸ்" புகைப்படத்தில் இடம்பெற்றவர் காலமானார் !
உலகப்புகழ் பெற்ற "தி கிஸ்" புகைப்படத்தில் இடம்பெற்றவர் காலமானார் !

உலகப்புகழ் பெற்ற ‘ தி கிஸ்’ புகைப்படத்தில் இடம்பெற்ற ராணுவ வீரர் ஜார்ஜ் மெண்டோன்சா காலமானார்.

ஆறாண்டுகள் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்தது. உலகப்போரின் வெற்றியை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் அமெரிக்க மக்கள் கூடி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ராணுவ வீரர் அருகின் நின்ற தனக்கு அறிமுகமே இல்லாத ஒரு செவிலியரை கட்டியணைத்து முத்தமிட்டார். அந்த நொடியை ஆல்பிரட் எய்சென்ஸ்டாட் என்பவர் புகைப்படம் எடுத்தார். 

அந்த புகைப்படம் வார இதழ் ஒன்றில் வெளியாக வெற்றிக்கொண்டாட்டத்தில் பரிமாறப்பட்ட அந்த முத்த புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனது. 'தி கிஸ்' என்ற புகழ்பெற்ற அந்த புகைப்படத்தில் இருப்பது நாங்கள் தான் என்று பலரும் போலியாக உரிமை கோரினர். ஆனால் 1980களில் அந்த ஜோடி யாரென்று கண்டுபிடிக்கப்பட்டது. 

இராணுவ வீரரான ஜார்ஜ் மெண்டோன்சாவும், செவிலியர் கிரேட்டா ஜிம்மர் பெண்ணும் தான் அந்த புகைப்படத்தில் இடம்பிடித்தவர்கள். அவர்களுக்குள் எந்த அறிமுகமும் இல்லாமல், அந்த முத்தத்துக்கு பிறகும் எந்த தொடர்பும் இல்லாமல் அவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் இடம்பெற்ற ஜார்ஜ் மெண்டோன்சா தனது 95 வயதில் தற்போது உயிரிழந்துள்ளார். புகழ்பெற்ற முத்த புகைப்படத்தை பகிர்ந்து மெண்டோன்சாவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புகைப்படத்தில் இடம்பெற்ற செவிலியர் கிரேட்டா ஜிம்மர் 2016ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com