அங்கிருந்து பாம்பா..? - மிரண்டு போன நபர்- மிரட்டும் வீடியோ!!
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி பயத்தை உண்டாக்கும் பாம்பு ஒன்று எதிர்பார்க்காத இடத்தில் இருந்து வந்தால் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. வெஸ்டர்ன் கழிவறை உள்ளே இருந்து பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பாம்பு ஒன்று கழிவறை உள்ளே இருந்து எட்டி பார்க்கிறது. ஒருவர் அதனை ஹோல்ஃப் ஸிடிக் மூலம் வெளியேற்ற முயற்சி செய்கிறார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஒருவர், இப்படி நடந்தால் என்ன செய்யமுடியும் என்று எனக்கு ஒருவித பயம் எப்போதும் இருக்கும். அது இன்று நண்பர் ஒருவருக்கு நடந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவுக்கு பலரும் பதில் தெரிவித்து வருகின்றனர். இனி எப்போதும் கழிவறை சென்றாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றும், இதுவும் ஒரு பாடம் தான் என்றும் பதிவிட்டுள்ளனர்.