ஒரு கிலோ எடை கொண்ட, டோனட் என்ற கேக்கை 80 விநாடியில் சாப்பிட முயன்றவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
அமெரிக்காவில் டென்வர் நகரிலுள்ள டோனட் கடை ஒன்று, குறைந்த நேரத்தில் டோனட்டை சாப்பிடும் போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் டிராவிஸ் மலூஃப் என்பவர் கலந்து கொண்டார். சிறிய கேக்கின் அளவில் இருந்த டோனட் அவரின் தொண்டையில் சிக்கியதால், மூச்சு விட முடியாமல் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.