'வாழும் டைனோசர்"- இளைஞரின் வலையில் சிக்கிய 159 கிலோ எடையுடைய மீன்

'வாழும் டைனோசர்"- இளைஞரின் வலையில் சிக்கிய 159 கிலோ எடையுடைய மீன்
'வாழும் டைனோசர்"- இளைஞரின் வலையில் சிக்கிய 159 கிலோ எடையுடைய மீன்

கனடாவின் ஆல்பர்ட்டா ஆற்றில் ஒரு நபர் 159 கிலோ எடையுள்ள 'வாழும் டைனோசர்' எனப்படும் மிகப்பெரிய மீனை பிடித்த சம்பவம் மிகப்பெரிய ஆச்சர்யத்தை தந்துள்ளது.

கனடாவில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு 159 கிலோ எடை கொண்ட மீன் ஒன்று சிக்கியுள்ளது. பிரேடன் ரூஸ் என்பவர், பொழுதுபோக்கிற்காக, ஆல்பர்ட்டா பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, திடீரென அவரது வலையில் 8 அடி நீளமுள்ள மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. அது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், அந்த மீனை 'வாழும் டைனோசர்' என குறிப்பிட்டுள்ளார்.



படகில் மீன் பிடிக்க ஆற்றுக்கு சென்ற ரூஸ் மற்றும் அவரின் காதலி சிட்னி ஆகியோர் படகில் இருந்து வலை விசியபோது இந்த மீன் சிக்கியது. ஆனால் அந்த மீனை பிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இவர்களை அந்த மீன் இழுத்து சென்றது. அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ஒரு வழியாக மீனை கரையேற்றினார்கள் இவர்கள் இருவரும்.

 "வாழும் டைனோசர்" என்ற பெயரைப் பெற்ற ஸ்டர்ஜன்கள் எனும் இந்த வகை மீன்கள் மிகவும் பழமையானது. 245-208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்த மீன்கள் எந்த பெரிய பரிணாம மாற்றமும் ஏற்படாமல் வாழ்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com