\
சிலந்தியை கொல்ல வீட்டை கொளுத்திய அமெரிக்கர்

சிலந்தியை கொல்ல வீட்டை கொளுத்திய அமெரிக்கர்

சிலந்தியை கொல்ல வீட்டை கொளுத்திய அமெரிக்கர்
Published on

அமெரிக்காவில் ஒருவர் சிலந்தியைக் கொல்ல வீட்டையே கொளுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் மிகப்பெரிய சிலந்தி ஒன்று இருந்தது கண்ட அவர், அதை அடித்து கொல்ல முயன்றார். சிலந்தி தப்பித்துக் கொண்டே இருந்தது. எனவே மிகப்பெரிய பர்னர் மூலம் தீயிட்டு கொல்ல முயன்றார்.

அப்போது வீட்டில் இருந்த திரைசீலையில் தீ பிடித்து பொருட்கள் மீதும் பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் பரவியது. உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com