\
பக்கிங்காம் அரண்மனையில் வாள் தாக்குதல்!

பக்கிங்காம் அரண்மனையில் வாள் தாக்குதல்!

பக்கிங்காம் அரண்மனையில் வாள் தாக்குதல்!
Published on: 

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை வாசலில் போலீஸ் அதிகாரிகளை வாளால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார். 

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை எப்போதும் பலத்த பாதுகாப்புடன் காணப்படும். இன்று காலை அங்கு வந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளை வாளால் தாக்கினார். இதில் அவர்கள் காயமடைந்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் எதற்காக இப்படி செய்தார் என்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்தபோது ராணி எலிசபெத் அரண்மனையில் இல்லை.

சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் இந்த தாக்குதல் அந்தப் பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com