பிரிட்டன் பிரதமரை வெடிகுண்டு வைத்து கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இரண்டு பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வடக்கு லண்டனை சேர்ந்த நைமூர் ஜக்காரியா ரஹ்மான் மற்றும் தென் கிழக்கு பர்மிங்காமைச் சேர்ந்த முகமது அகிப் இம்ரான் ஆகிய இருவரும் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் பிரிட்டன் பிரதமர் தெரசா மே வீட்டில் வெடுகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இவர்களின் மீது பிரிட்டன் உளவுத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட சில வாரங்களாக தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்தக் கண்காணிப்பின் இறுதியில் அவர்கள் பிரதமரை கொள்ள திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டதால், இருவரையும் கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் வேறு யாரேனும் உள்ளனரா என்று கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.