\
நடுவானில் குலுங்கிய மலேசிய விமானம்

நடுவானில் குலுங்கிய மலேசிய விமானம்

நடுவானில் குலுங்கிய மலேசிய விமானம்
Published on

கோலாலம்பூருக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ330-300 விமானம் சிட்னியிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சில மணிநேரத்திலேயே விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. விமானத்தின் ஒரு எஞ்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் குலுங்குவதை விமான ஓட்டிகள் உணர்ந்தனர். உடனடியாக விமானத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள அலிஸ் ஸ்பிரிங்ஸ் நகரில் தரையிறக்கினர். இரவு முழுவதும் விமான நிலையத்தில் தங்கி இருந்த பயணிகள் பின்னர் வேறு விமானம் மூலம் கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com