முன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை

முன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை
முன்னாள் பிரதமர் வீட்டில் அதிரடி சோதனை

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு சொந்தமான வீடுகளில் திடீரென காவல்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமராக இருந்த காலத்தில் நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க‌ப்படும் என புதிய பிரதமராக பதவியேற்ற மகாதிர் அறிவித்திருந்தார். இந்நிலையில் நஜீப் ரசாக்குக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட ஐந்து இடங்களில் மலேசிய காவல்துறையினர் நேற்று இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். காலை வரை விடிய, விடிய நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இரு பைகளையும் அவரது வீட்டில் இருந்து காவல்துறையினர் எடுத்துச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து நஜீப் ரசாக் கைது செய்யப்படுவாரா என அவரது வழக்கறிஞரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கான சமிக்ஞை ஏதும் இல்லை என்றும், நிதி முறைகேடு தொடர்பான எந்த ஆவணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com