அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் வடகொரியாவிற்கு மலேசியர்கள் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா. விதித்துள்ள பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளைகள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் வடகொரியா 6வது முறையாக மேற்கொண்ட அணுஆயுத சோதனைக்குப் பிறகு அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் மலேசியர்கள் வடகொரியா செல்ல தடைவிதித்து மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.