மலேரியாபுதியதலைமுறை
உலகம்
”உலக அளவில் மலேரியா பாதிப்பும் இறப்பும் அதிகரித்துள்ளது” - உலக சுகாதார அமைப்பு அறிக்கை
இந்தியாவை பொறுத்தவரை மலேரியா பாதிப்பு 2017ல் 60 லட்சமாக இருந்ததாகவும், கொரோனா பாதிப்புக்குப் பிறகு 20 லட்சமாக குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார
அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் மலேரியா பாதிப்பும் இறப்பும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு முதலே உலக அளவில் மலேரியா
பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 22.5 கோடியாக இருந்த மலேரியா
பாதிப்பு, 2023ஆம் ஆண்டு 22.6 கோடியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு மலேரியாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 5.78 லட்சமாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 5.97 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை மலேரியா பாதிப்பு 2017ல் 60 லட்சமாக இருந்ததாகவும், கொரோனா பாதிப்புக்குப் பிறகு 20 லட்சமாக குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார
அமைப்பு குறிப்பிட்டுள்ளது.