நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது!

நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது!

நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ: பூட்டானில் இந்தியர் கைது!
Published on

நினைவு ஸ்தூபியில் ஏறி நின்று வீடியோ எடுத்த இந்தியர் பூடானில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூடானைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் தலைமையில், 15 பேர் கொண்ட குழு பைக்கில் பூட்டானுக்குச் சுற்றுலா சென்றது. அதில் ஒருவர் மகாராஷ்ட்ராவைச் சேர்ந்தவர் அபிஜித் ரதன் ஹஜாரே. இந்த குழு, பூடானின் டச்சுலா பாஸ் என்ற பகுதியில் ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கிருந்த நினைவு ஸ்தூபி ஒன்றின் மீது ஏறி நின்று அபிஜித் வீடியோவும் புகைப்படமும் எடுத்தார். வெற்றி சோர்டன்கள் எனப்படும் இந்த நினைவு ஸ்தூபி, பூட்டான் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டவை.

இங்கு எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை அபிஜித், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பூடான் பத்திரிகைகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அங்குள்ள போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர், ’நினைவு ஸ்தூபியின் முக்கியத்துவம் தெரியாமல் ஏறிவிட்டேன், தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் கடிதம் எழுதி கொடுத்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com