லாட்டரியில் ஜாக்பாட் அடித்த 44 கோடி ரூபாய்! பணம் கிடைத்தபோதும் ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்!

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓவ்வொரு மாதமும் தவறாமல் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.
முனாவர் பைரோஸ் லாட்டரியில் பரிசு பெற்றவர்
முனாவர் பைரோஸ் லாட்டரியில் பரிசு பெற்றவர்வளைதளம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரியும் இந்தியருக்கு லாட்டரியில் 44 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

இந்தியரான முனாவர் பைரோஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் கிடைத்த சம்பளம் போதாமல் பணம் ஈட்ட வேறு வழிகளை தேடியுள்ளார்.

அதன் மூலம் ‘பிக் டிக்கெட்’ என்ற லாட்டரி திட்டம் மூலம் நண்பர்களுடன் இணைந்து லாட்டரி சீட்டுகளை வாங்க ஆரம்பித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓவ்வொரு மாதமும் தவறாமல் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 44 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டது.

”எனக்கு பரிசு கிடைக்கும் என நான் எதிர்ப்பார்க்கவில்லை” என பைரோஸ் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களின் பங்களிப்புடன் லாட்டரி சீட்டு வாங்கிய அவர் தனக்கு கிடைக்கவிருக்கும் பணத்தை 30 பேருடன் பகிர உள்ளதாகக் கூறப்படுகிறது. இதே போல் அபுதாபியை சேர்ந்த சுதேஷ் குமார் குமரேசன் என்பவருக்கு கடந்த டிசம்பர் மாதம் லாட்டரியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com