பூச்சிகளுக்கு மார்வெல் கதாபாத்திரங்களின் பெயர்களை சூட்டிய விஞ்ஞானிகள்

பூச்சிகளுக்கு மார்வெல் கதாபாத்திரங்களின் பெயர்களை சூட்டிய விஞ்ஞானிகள்
பூச்சிகளுக்கு மார்வெல் கதாபாத்திரங்களின் பெயர்களை சூட்டிய விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மார்வெல் காமிக் யுனிவெர்ஸுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஐந்து சிறிய ஈ வகை பூச்சிகளுக்கு மார்வெல் கதாபாத்திரங்களின் பெயர்களை அறிவியல் பெயர்களாக சூட்டியுள்ளனர். அவற்றில் புத்திசாலியான வில்லனாக வந்த டெட்பூல், சூப்பர் ஹீரோவாக வந்த ஸ்டான் லீ ஆகியோர்களின் பெயர்களும் அடங்கும்.

கடந்த ஆண்டு விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்ட 165 கண்டுபிடிப்புகளில் இந்த ஐந்து பூச்சிகளும் ஒரு பகுதியாகும். இரண்டு மீன்கள், மூன்று சிறிய பறவைகள் ஆகியவையும் உள்ளன என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒரு இனத்திற்கு பெயரிடுவது என்பது அந்த இனத்தைப் புரிந்துகொள்வதற்கான முதல் படியாகும். அறிவியல் பெயர்கள் இல்லாவிட்டால் இந்த இனங்கள் அறிவியல் பிரிவில் கண்ணுக்கு தெரியாதவை ஆகிவிடும்.

இதில் ஒரு பூச்சிக்கு காமிக் டைட்டனுடைய கண் கண்ணாடிகள் மற்றும் வெள்ளை மீசை போன்ற சிறப்பு அடையாளங்கள் ஒத்துப்போனதால் ஸ்டான் லீ என பெயரிடப்பட்டது. அதேபோல் ஒரு ஈயின் பின்புறத்தில் இருக்கும் அடையாளங்கள் மற்றும் அதன் முகம் வில்லன் கதாபாத்திரத்தின் சிவப்பு மற்றும் கறுப்பு முகமூடியை ஒத்திருப்பதால் டெட்பூலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்கிறனர் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ விஞ்ஞானிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com