\
காதலுக்கு ஏது பேதம்! தூய்மை பணியாளரை கரம் பிடித்த பாக். மருத்துவர்.. வைரலாகும் ஃபோட்டோ

காதலுக்கு ஏது பேதம்! தூய்மை பணியாளரை கரம் பிடித்த பாக். மருத்துவர்.. வைரலாகும் ஃபோட்டோ

காதலுக்கு ஏது பேதம்! தூய்மை பணியாளரை கரம் பிடித்த பாக். மருத்துவர்.. வைரலாகும் ஃபோட்டோ
Published on

பாகிஸ்தானில் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றிய ஊழியரை, அதே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி, மதம், சாதி, வயது வரம்பு, தொழில், படிப்பு என எதையும் பார்ப்பதில்லை காதல். அந்தவகையில் பாகிஸ்தானில் மருத்துவரும், தூய்மை பணியாளரும் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது. திபால்பூரில் வசித்து வரும் மருத்துவர் கிஸ்வர் சாஹீபா என்பவர் அதேப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

அதே மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியுள்ளார் ஷசாத். அவர் மீது காதல் கொண்ட மருத்துவர் கிஸ்வர் சாஹீபா தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஷசாத் சம்மதம் தெரிவிக்க கடைசியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

ஏற்கனவே பணியாற்றி வந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறிய கிஸ்வர் சாஹீபா, தற்போது சொந்த ஊரிலேயே கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். ஷசாத்துடன் அற்புதமான திருமண வாய்ப்பை இழக்க விரும்பாததால் தனது காதலை வெளிப்படுத்தியதாக கிஸ்வர் சாஹீபா தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com