பெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டுக்கொன்ற இளைஞர்!
அமெரிக்காவில் பெற்றோர், காதலி உட்பட 5 பேரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடிய இளைஞரை, போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது, லூசியானா. இங்குள்ள கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிச பெத் மற்றும் கெய்த் தேரியட். 50 வயதுள்ள இவர்கள் மகன் டகோடா தேரியட் (21). டகோடா, தனது பெற்றோரை துப்பாக்கி யால் சுட்டுள்ளார். இதில் அவர்கள் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர்கள் உயிரிழந்தனர்.
இதே போன்று அதே பகுதியின் மற்றொரு பகுதியான லிவிங்ஸ்டனில், பில்லி எர்னெஸ்ட் (43), சம்மர் எர்னெஸ்ட் (20), டேனர் எர்னெஸ்ட் (17) மற்றும் ஆகியோர் சுட்டுக்கொல்லப் பட்டனர். இவர்களைக் கொன்றதும் டகோடா என்பது போலீஸ் விசார ணையில் தெரியவந்துள்ளது. இதில் சம்மர் எர்னஸ்டை, டகோடா காதலித்து வந்துள்ளார்.
இந்த கொலைகளை செய்து விட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். அவர் எதற்காக இந்த கொலைகளை செய்தார் என்று தெரிய வில்லை. போலீசார் அவரைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.