\
கடல் கடந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.... லண்டனில் தமிழர்கள் போராட்டம்

கடல் கடந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.... லண்டனில் தமிழர்கள் போராட்டம்

கடல் கடந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.... லண்டனில் தமிழர்கள் போராட்டம்
Published on

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக் களம் கடல் கடந்தும் விரிவடைந்துள்ளது.

உலகெங்கும் தமிழர்கள் வாழும் நாடுகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்திய தூதரக அலுவலகம் முன் திரண்ட இங்கிலாந்து வாழ் தமிழர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போஸ்டர்களை கைகளில் ஏந்தி நின்ற தமிழர்கள், இந்த விவகாரத்தில் இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்‌தனர். தமிழர்களின் பாரம்பரியம் அழிவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என்று கூறிய அவர்கள், இதற்காக உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் குரல் கொடுப்போம் என்று உறுதிபடத் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com