அமெரிக்காவில் காட்டுத்தீ - காணாமல் போன செல்லப்பிராணிகளை தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவில் காட்டுத்தீ - காணாமல் போன செல்லப்பிராணிகளை தேடும் பணி தீவிரம்
அமெரிக்காவில் காட்டுத்தீ - காணாமல் போன செல்லப்பிராணிகளை தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவில் உள்ள கொலராடோவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது காணாமல் போன தங்களது செல்லப் பிராணிகளை அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.

மணிக்கு 105 மைல் வேகத்தில் காற்று வீசியதால், கடந்த 30ஆம் தேதி முதல், காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இதனால் ஏராளமான வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாகின. தீ விபத்தின் போது, வீடுகளில் வளர்த்து வந்த 67 செல்லப் பிராணிகள் காணாமல் போயுள்ளன. தற்போது பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், பனிக்குவியலுக்கு மத்தியில், செல்லப்பிராணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தன்னார்வலர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com