மன இறுக்கத்தை போக்க ஒட்டக ‌சிகிச்சை

மன இறுக்கத்தை போக்க ஒட்டக ‌சிகிச்சை

மன இறுக்கத்தை போக்க ஒட்டக ‌சிகிச்சை
Published on

மன இறுக்கத்தை போக்கும் லாமாஸ் ஒட்டக சிகிச்சை அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

பொதுவாக மன இறுக்கத்தை போக்கிக் கொள்வதற்காக கூ‌ட்டாக சேர்ந்து சிரித்து மகிழும் யோகா சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மாற்றாக ‌லாமாஸ் மற்றும் அல்பாகாஸ் என்ற புதுவிதமான சிகிச்சை முறையை, ஷ‌னான் ஜாய் என்பவர் அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளார். இந்த முறை சிகிச்சையில் லாமாஸ் என்ற ஒட்டகம் மூலம் அன்பைப் பரப்பும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மன இறுக்கம் குறைக்கப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சிகிச்சை மூலம், முதியோர் இல்லங்களில் தனிமையில் வாடும் முதியவர்களை, ஷனான் மகிழ்ச்சி அடைய செய்து வருகிறார்.

மேலும் திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும், லாமாஸ் ஒட்டகம் மூலம் அன்பை பரப்பும் சிகிச்சை முறையை ஷனான் ஆரம்பித்துள்ளார். இதனால் திருமணம் போன்ற விழாக்களுக்கு வரும் பலர் லாமாஸ் ஒட்டகத்துக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறுவதுடன், தங்களது மன இறுக்கத்தையும் போக்கிக் கொள்கின்றனர். அமெரிக்க மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறை தற்போது வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com