சிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ

சிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ

சிறுமிக்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடும் அனகோண்டா - ஒருகோடி பேர் பார்வையிட்ட வீடியோ
Published on

சிறுமிக்கு முத்தமிட்டு அவருடன் அனகோண்டா பாம்பு ஒன்று கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

ட்விட்டரில் பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். அதில், மஞ்சள் நிறம் கொண்ட பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும் அனகோண்டா பாம்பு ஒன்று சிறுமியுடன் கொஞ்சி விளையாடுகிறது. 17 நொடிகள் மட்டுமே இருக்கும் அந்த வீடியோவின் தொடக்கத்தில் பாம்பானது கண்ணாடி சுவரின் மீது ஊர்ந்து கொண்டிருந்தது. சிறுமி அந்த பாம்பின் அருகில் வந்து அமர்கிறாள். 

அதன்பிறகு, நீண்ட உயரமுள்ள அந்த பாம்பு சிறுமிக்கு முத்தங்களை கொடுக்கிறது. பின்னர், அவளது மடியிலும் தவழ்ந்து செல்கிறது. பாம்பு தன் மீது விளையாடும் போது அந்த சிறுமி சிறிதும் பயமின்றி புன்னகையுடன் இருக்கிறார். இந்த வீடியோ பதிவை தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளார்கள். 29 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். 8 ஆயிரம் பேர் ரிட்விட் செய்துள்ளனர்.

இந்த வீடியோ பதிவிற்கு பலரும் பலவிதமான கமெண்ட்களை செய்து வருகிறார்கள். சிலர் செல்லப்பிராணியை போல் சிறுமி பாம்புடன் விளையாடுவதாக பாராட்டினர். சிலர் என்னதான் இருந்தாலும் அது பாம்புதான் என்று எச்சரிக்கையுடன் கருத்து கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com