உலகம்
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கிய நாடு: போர் பதற்றத்தில் எல்லை
உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்கிய நாடு: போர் பதற்றத்தில் எல்லை
லிதுவேனியா அரசு, ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பி வைத்துள்ளது.
ரஷ்யா-உக்ரனை இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் உக்ரனைக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக லிதுவேனியா அரசு தொடர்ந்து உக்ரனைக்கு ஆயுதங்களை அனுப்பி ஆதரவு அளித்துவரும் நிலையில், விமானங்களை தாக்கும் வல்லமைகொண்ட ஸ்டிங்கர் வகை ஏவுகணைகளை தற்போது வழங்கியுள்ளது. உக்ரைனுக்கு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 17 விமானங்கள் மூலம் 1,500 டன் வெடி மருந்துப் பொருட்களை அண்டை நாடுகள் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.