எம்பாப்பே, கரிம் பென்சிமாவை தோற்கடித்து, 7வது முறையாக உலகளவில் மெஸ்ஸி செய்த சாதனை!

எம்பாப்பே, கரிம் பென்சிமாவை தோற்கடித்து, 7வது முறையாக உலகளவில் மெஸ்ஸி செய்த சாதனை!
எம்பாப்பே, கரிம் பென்சிமாவை தோற்கடித்து, 7வது முறையாக உலகளவில் மெஸ்ஸி செய்த சாதனை!

2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லயனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில், கால்பந்தில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த வீரர், வீராங்கனைகளை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுத்துள்ளது. இதில், பிஃபா அமைப்பின் 211 உறுப்பு நாடுகளுடன், தேசிய அணியின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆன்லைன் முறையில் வாக்களித்தனர். இந்தப் போட்டியில் பிரான்சின் எம்பாப்பே, கரிம் பென்சிமா ஆகிய வீரர்களை இறுதிச் சுற்றில் முறியடித்து, சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வானார்.

கடந்த 14 ஆண்டுகளில் மெஸ்ஸி 7வது முறையாக சிறந்த வீரர் விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையை வெல்வதில் மெஸ்ஸி முக்கிய பங்கோற்றியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது. 

இந்த சர்வதேச விருதுகளில், சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புட்டல்லாஸ் வென்றுள்ளார். சிறந்த பயிற்சியாளருக்கான விருதை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லயோனல் ஸ்கோனி வென்றுள்ளார். பாரிஸில் நடைபெற்ற இந்த விருது அறிவிப்பு விழாவில், மறைந்த கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com