சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த சிங்கக்குட்டி சிம்பா!

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த சிங்கக்குட்டி சிம்பா!
சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த சிங்கக்குட்டி சிம்பா!

கருவுறுதல் செயல்முறையின் போது இறந்த முபாசா சிங்கத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட விந்திலிருந்து, செயற்கை கருவூட்டல் மூலம் சிம்பா என்ற சிங்கக்குட்டி பிறந்தது. சிம்பாவின் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை, அங்கு புதிதாகப் பிறந்த சிங்கக் குட்டியின் வருகையை கொண்டாடுகிறது. கருவுறுதல் செயல்முறையின் போது தனது தந்தையை இழந்த இந்த சிங்கக்குட்டி சிம்பா செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்தது. செயற்கை கருவூட்டல் மூலம் சிங்கங்கள் கருத்தரிக்கப்படுவது அரிது. முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் இரண்டு குட்டிகள் பிறந்தபோது இம்முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் தற்போது புதிதாகப் பிறந்த சிங்கக்குட்டிக்கு டிஸ்னியின் தி லயன் கிங் படத்தின் முக்கிய கதாபாத்திரமான ஜிம்பா என்று பெயரிடப்பட்டுள்ளது. சிம்பாவின் தந்தை முபாசாவும் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் பெயரால்தான் அழைக்கப்பட்டது.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த முபாசா, கருவுறுதல் நடைமுறையில் இருந்து தப்பவில்லை. அப்போது முபாசா யிருக்கு போராடியதால் அந்த சிங்கத்தை 'மனிதாபிமான அடிப்படையில்' கருணைக்கொலை செய்வதற்கான முடிவை மிருககாட்சிசாலை அதிகாரிகள் எடுத்தார்கள். அதன்பின்னர் முசாபாவின் விந்து சேகரிக்கப்பட்டு அவரது இரத்த ஓட்டம் தற்போது தொடர்கிறது.

சிம்பா கடந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தது. தாய் கெய்லா, தனது பாலூட்டி சுரப்பிகளின் வீக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆரம்பத்தில் பாலூட்டுவதற்கு சிரமப்பட்டது. சிம்பாவுக்கு மிருகக்காட்சிசாலை உதவிகளை அளித்தன. சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையின் மாமிச உணவுகளின் தலைமைக் காப்பாளர் குகன் கிருஷ்ணன் "இது ஒரு நுட்பமான முடிவு, ஏனென்றால் விலங்குகள் தங்கள் குட்டிகளுக்கு வெளியிலிருந்து வழங்கப்படும் உதவிகளை  நிராகரிக்க முடியும். அதிர்ஷ்டவசமாக, கெய்லா எங்களின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இது காலப்போக்கில் எங்களுக்கிடையே கட்டமைக்கப்பட்ட நம்பிக்கையை பிரதிபலிக்கிறதுஇது நேர்மறையான முடிவை அடைய உதவியது" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com