\
கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ

கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ

கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கி 6 பேர் படுகாயம்: அதிர்ச்சி வீடியோ
Published on

கோல்ப் மைதானத்தில் மின்னல் தாக்கியதில் 6 பேர் படுகாயமடைந்தனர். மின்னால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைர லாகி வருகிறது.

பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப் போட்டி, அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். அங்கு திடீரென புயல் காற்று வீசியதால், ரசிகர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அங்கு திடீரென மின்னல் தாக்கியது. இதில் ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த 6 ரசிகர்கள் படுகாயம டைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com