" ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரும் அபாயம் உண்டாகும்"- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

" ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரும் அபாயம் உண்டாகும்"- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

" ஊரடங்கை தளர்த்தினால் மிகப்பெரும் அபாயம் உண்டாகும்"- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Published on

ஊரடங்கை முன்கூட்டியே தளர்த்தினால் மிக அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் ஜிப்ரேயஸஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெருந்தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளாதாக கருதப்பட்டாலும், 16 ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட நாடுகளில் சமூக பரவல் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர்,

மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழலை எளிதாக்க, சில நாடுகள் ஊரடங்கை தளர்த்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகளை விலக்கவே உலக சுகாதார அமைப்பும் விரும்புகிறது. அதேநேரம், முன்கூட்டியே கட்டுப்பாடுகளை தளர்த்துவதால் மிகப்பெரும் அளவிலான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும்.

நோய்களை கண்டறிவது, வருமுன் தடுப்பது, போன்றவற்றை செய்யத் தவறுவதால், மிகப்பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாக கூறிய டெட்ராஸ், எந்த நாடும் வலுவான சுகாதார அமைப்பை கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்தார்

ஒவ்வொரு மாதமும், 100 மில்லியன் முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள், 25 மில்லியன் என்95 முகக் கவசங்கள், செயற்கை சுவாச கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவப் பொருட்களை அனுப்ப வேண்டியிருப்பதாக கூறிய டெட்ராஸ், இதற்காக 747 விமானங்கள், 8 நடுத்தர ரக சரக்கு விமானங்கள் மற்றும், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பயணிப்பதற்கான 8 சிறிய ரக பயணிகள் விமானங்களை ஈடுபடுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com