தாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும்

தாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும்

தாய்லாந்து குகையும் ; ஆறுதல் தரும் கடிதங்களும்
Published on

வடக்கு தாய்லாந்தில் தாம் லுவாங் குகை உள்ளது. இங்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தங்களது கால்பந்தாட்ட பயிற்சியை முடித்த குழு ஒன்று பொதுழுபோக்கிற்காக சுற்றி பார்க்க சென்றுள்ளது. பயிற்சியாளர் ஒருவர், 12 மாணவர்கள் என மொத்தமாக 13 பேர் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குகையை விட்டு வெளியே வருவதற்குள் கடுமையான மழை பெய்துள்ளது. இதனால் குகையின் முன்புற வாசல் மழையால் மூடப்பட்டது. தொடர்ந்து தாய்லாந்தில் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

13 பேரும் உயிரோடு இருக்கிறார்களா என்ற சந்தேகம் இருந்த நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் அவர்கள் உயிரோடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அவர்களை மீட்க முடியாமல் இரணுவத்தினர் திணறி வருகின்றனர். இப்படி சோகமே ஆட்கொண்ட தாய்லாந்து சிறுவர்களின் பெற்றோம் அவர்களை மீண்டும் பார்த்துவிட மாட்டோமா என ஏங்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் சிறுவர்களின் இரண்டாவது வீடியோ வந்து அவர்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியது. 

இப்படி உலகே பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அவர்களிடம் இருந்து கடிதங்கள் வருகிறது. சிறுவர்களின் கால்பந்து பயிற்சியாளர் எழுதியிருக்கும் கடிதத்தில் ’ உங்களது குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள், என்னால் முடிந்தவரை எந்த துன்பமும் உங்கள் குழந்தைகளை அணுகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஒத்துழைப்பிற்கு நன்றி , நான் செய்த இந்த செயலுக்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ என எழுதியிருந்தார்.

குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்களின் ஒருவனான பிபெட் நிக் தனது கடிதத்தில் “ அம்ம, அப்பா, அண்ணா உங்கள் அனைவரையும் ரொம்ப மிஸ் பண்றேன், எனக்கு பிடித்த மாட்டிறைச்சி உணவு வேண்டும், கொடுங்கள்” என கேட்டுள்ளான். மற்றொரு சிறுவனான பனுமாஸ் “ உங்கள் அனைவரையும் பாசத்தோடு நினைவு கூர்கிறேன், நான் இங்கு பத்திரமாக உள்ளேன், கவலைப்படாதீர்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறுவன் : கொஞ்சம் குளிருது, மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை, அப்புறம் இந்த களேபரத்துல என்னோட பிறந்த நாள கொண்டாட மறந்திட வேண்டாம்” என்றும் எழுதியுள்ளான். 

சிறுவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இப்போது பெற்றோர்கள் தரப்பில் பதில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், மிஸ்டர் ஏக், உங்கள் மீது எங்கள் யாருக்கும் எந்த கோபமும் இல்லை, நீங்கள் அப்படி எந்த எண்ணமும் கொள்ளத் தேவையில்லை ; உங்களை முழுமையாக புரிந்து கொண்டுள்ளோன்ம்; விரைவில் அனைவரும் மீண்டு வாருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 14 நாட்களாக தாய் குகையில் மாட்டித் தவித்து வரும் நிலையில், கடிதப் போக்குவரத்து பெற்றோர்களுக்கும் , மக்களுக்கும் சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 

மேலும் படிக்க : குகைக்குள் சிக்கிய சிறுவர்களுக்காக உயிரை தியாகம் செய்த வீரர்   https://goo.gl/QhbMjv

                                 10 நாட்களாக குகை இருளில் தவிக்கும் சிறுவர்கள்.. மீட்புப் பணியில் தொடரும் சிக்கல்..!   https://goo.gl/JGXPuj

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com