\
டாவின்சி ஓவியம் சுமார் ரூ.3000 கோடிக்கு ஏலம்

டாவின்சி ஓவியம் சுமார் ரூ.3000 கோடிக்கு ஏலம்

டாவின்சி ஓவியம் சுமார் ரூ.3000 கோடிக்கு ஏலம்
Published on

லியோனார்டோ டாவின்சி வரைந்த ஓவியம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல ஏல நிறுவனமான கிறிஸ்டியில் புகழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி வரைந்த ஏசு நாதரின் அழகிய ஓவியம் ஏலத்துக்கு வந்தது. தனி நபர்களிடம் கடைசியாக இருக்கும் இந்த டாவின்சி ஓவியத்தின் ஆரம்பக்கட்ட ஏலத் தொகை 490 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

தொலைபேசி மூலம் இந்த ஓவியத்தை ஏலம் எடுக்க பலர் போட்டியிட்ட நிலையில், கடைசியாக 3000 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. அதை ஏலத்தில் எடுத்தவர் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com