உலகம்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி லெபனானில் போராட்டம்: பலர் காயம்
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி லெபனானில் போராட்டம்: பலர் காயம்
லெபனானில் நடந்த போராட்டத்தின்போது பலர் காயமடைந்துள்ளனர்.
லெபனான் நாட்டில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் பலர் காயமடைந்தனர். பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் போராட்டம் வெடித்தது. அப்போதைய அரசு பதவியிலிருந்து இறங்கிய நிலையில் இதுவரை புதிய அரசு பொறுப்பேற்கவில்லை.
நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலுக்கு தீர்வுகாண வலியுறுத்தி பெய்ரூட் நகரில் நேற்று நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்தி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பரஸ்பரம் நடந்த தாக்குதலில் இருதரப்பிலும் 160பேர் காயமடைந்தனர்