லெபனான் வெடிவிபத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்: நாட்டின் தகவல் அமைச்சர் ராஜினாமா

லெபனான் வெடிவிபத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்: நாட்டின் தகவல் அமைச்சர் ராஜினாமா
லெபனான் வெடிவிபத்துக்கு எதிராக மக்கள் போராட்டம்: நாட்டின் தகவல் அமைச்சர் ராஜினாமா

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு எதிராக பொதுமக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக அந்நாட்டின் தகவல் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

பெய்ரூட்டில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தின் காரணமாக 160 பேர் உயிரிழந்தனர், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பெய்ரூட்டிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சீர்குலைந்துள்ளன. இதனால் நிர்வாக திறனின்மை மற்றும் ஊழல் காரணமாகவே பெய்ரூட் துறைமுகக் கிடங்கில்  வெடிவிபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு அலுவலங்கள் மீது மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர், இதில் ஒரு காவல்துறை அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார், பொதுமக்கள் சிலர் காயமடைந்தனர், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக இப்போது லெபனான் அமைச்சர் பதவி விலகியுள்ளார்

தகவல் அமைச்சர் மனல் அப்தெல்-சமத் தனது ராஜினாமா கடிதத்தில்  “ லெபனான் மக்களின்  விருப்பங்களை நிறைவேற்றத் தவறியதற்கு வருத்தப்படுவதாக கூறியுள்ளார். மேலும் “பெய்ரூட்  பேரழிவின் காரணமாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் வேதனை மற்றும்  பொதுமக்களின் விருப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில்  நான் அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்கிறேன்"என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com