‘லெபனான் வெடிவிபத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்’ -ட்ரம்ப் சந்தேகம்!
லெபனானில் நடந்த வெடிவிபத்து, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
லெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுக கிடங்கில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் 73 பேர் பலியாகினர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணங்கள் மற்றும் என்ன வகையான வெடிபொருள்கள் வெடித்தன என்பது குறித்து உறுதியான தகவல இதுவரை தெரியவில்லை.
இந்நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை உலுக்கிய சக்திவாய்ந்த வெடிப்புகள் ஒருவித குண்டு காரணமாக ஏற்பட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க ராணுவ தளபதிகள் தன்னிடம் கூறியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இது போன்ற மிகப்பெரிய தாக்குதல் நிகழ்ந்ததில்லை. இது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் போன்று உள்ளது என்று ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறினார்.