தாயை போல லீப் தேதியில் பிறந்த குழந்தை... அமெரிக்காவில் நடந்த மற்றொரு ஆச்சரிய நிகழ்வு!

பிரிட்டனில் 40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு, இந்த வருடம் அதே லீப் தேதியில் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தினை ஏற்படுத்துகிறது.
பிப்ரவரி 29-ல் பிறந்த தன் குழந்தையுடன் தாய்
பிப்ரவரி 29-ல் பிறந்த தன் குழந்தையுடன் தாய்ட்விட்டர்

நம் எல்லோருக்கும் வருடாவருடம் வரும் நம்முடைய பிறந்தநாள், ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் டேதான். ஆனால் அதுவே 4 நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாக மாறினால்... அதாவது, லீப் வருடத்தில் வரும் நாளாக வந்தால் எவ்வளவு ஸ்பெஷலாக இருக்கும் அந்த நாள்? அடடா என்றிருக்கிறதல்லவா?

‘அதலாம் இல்லையே, இதிலென்ன இருக்கு’ என்று சிலருக்கு சகஜமாக தோன்றலாம். சரிதான். ஏனெனில் உலகில், குறைந்தது 5 மில்லியன் மக்கள் தங்களின் பிறந்தநாளை லீப் தினத்தில் கொண்டாடி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருக்கட்டும். ஆனால் இதிலேயே இன்னொரு சுவாரஸ்யமும் சேர்ந்து நடந்தால்...!? அதாவது தாய்க்கும் மகளுக்கும் ஒரேபோல லீப் டேவில் பிறந்தநாள் வந்தால் எப்படி இருக்கும்...! ஆம், இப்படி ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் பிரிட்டனில் நடந்துள்ளது.

பிப்ரவரி 29-ல் பிறந்த தங்கள் குழந்தையுடன் தாய் - தந்தை
பிப்ரவரி 29-ல் பிறந்த தங்கள் குழந்தையுடன் தாய் - தந்தை

அமெரிக்காவில் வட கரோலினாவில் மைக்கேல் பெய்க் -  Kai Sun என்ற தம்பதி வசித்து வருகின்றனர். மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான கை சன், கடந்த வருடம் 3வது முறையாக கருத்தரித்துள்ளார்.

இதில் இவருக்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி காலை 5.12 மணி அளவில் மூன்றாவது குழந்தையான சோலி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கை சன்னும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீப் தேதியான பிப்ரவரி 29 ஆம் தேதிதான் பிறந்துள்ளார்!

இது குறித்து கை சன் கூறும்போது, “எங்கள் மகள் சோலி பிப்ரவரி 26 ஆம் தேதி பிறக்கவிருந்தார். நானும் என் கணவரும், என் பிறந்தநாளான பிப்ரவரி 29 ஆம் தேதி குழந்தை பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று சொல்லி கொண்டிருந்தோம்.

பிப்ரவரி 29-ல் பிறந்த தங்கள் குழந்தையுடன் தாய் - தந்தை
பிப்ரவரி 29-ல் பிறந்த தங்கள் குழந்தையுடன் தாய் - தந்தை

அதற்காக நாங்கள் எதுவும் திட்டமிடவில்லை. இருந்தபோதிலும் குழந்தை எப்படியோ பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்து விட்டார்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். குழந்தை சோலி 6 பவுண்டுகள் மற்றும் 13 அவுன்ஸ் எடையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

பிப்ரவரி 29-ல் பிறந்த தன் குழந்தையுடன் தாய்
நிதி வசூல் செய்ய போட்டி என்ற பெயரில் மாணவர்களை இவ்வளவு கேவலமாக நடத்துவதா? அமெரிக்காவில் அதிர்ச்சி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com