ஆப்கானில் குண்டுவீச்சு: கேரள ஐஎஸ் தலைவர் உட்பட 5 இந்தியர்கள் உயிரிழப்பு!

ஆப்கானில் குண்டுவீச்சு: கேரள ஐஎஸ் தலைவர் உட்பட 5 இந்தியர்கள் உயிரிழப்பு!
ஆப்கானில் குண்டுவீச்சு: கேரள ஐஎஸ் தலைவர் உட்பட 5 இந்தியர்கள் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை குறி வைத்து அமெரிக்க படையினர் நடத்திய குண்டுவீச்சில், கேரள, ஐஎஸ் பிரிவு தலைவர் உட்பட 5 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். ஐஎஸ் அமைப்புக்கு உலகம் முழுவதும் இருந்து ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் ஐஎஸ்  பயங்கரவாத கொள்கையில் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு ஆதரவாக, ஆட்களை சேர்த்து வந்தார். பொறியியல் பட்டதாரியான இவர், காசர்கோடு பகுதியை சேர்ந்தவர். ஐஎஸ் அமைப்பின் கேரள பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 21 ஐஎஸ் பயங்கரவாதிகளுடன், கடந்த 2016 ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார். கேரளாவில் இருந்து துபாய் சென்ற அவர், அங்கிருந்து டெஹ்ரான் வழியாக ஆப்கானுக்குச் சென்றுள்ளார். அப்துல்லாவின் மனைவி ஆயிஷாவும் உடன் சென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகச் செயல்பட்டு வந்தவர் இவர். ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக தீவிரமாகப் பதிவிட்டு வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவரது பக்கத்தில் எதுவும் பதிவிடப்படவில்லை. இதையடுத்து அவருக்கு என்ன ஆனது சிலர் கேள்வி எழுப்பினர். இதையடுத்தே அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது.

ஐஎஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர், ’’ஆப்கானில் அமெரிக்க படைகளின் குண்டு வீச்சில், அப்துல்லா உயிரிழந்து விட்டார். அவரோடு மூன்று இந்திய சகோதரர்கள், இரண்டு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் கொல்லப்பட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.  இருந்தாலும் இவர்களது உயிரிழப்பை இந்திய பாதுகாப்பு அமைப்பினர் உறுதிப்படுத்தவில்லை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com