நெருப்பு பந்துகளை வீசி சண்டையிடும் திருவிழா

நெருப்பு பந்துகளை வீசி சண்டையிடும் திருவிழா
நெருப்பு பந்துகளை வீசி சண்டையிடும் திருவிழா

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில், எரிமலை வெடிப்பை நினைவு கூரும் வகையில் நெருப்புப் பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசியெறிந்து கொள்ளும் நூதன திருவிழா நடைபெற்றது.

எல் சால்வடாரில் கடந்த 1922 ஆம் ஆண்டு மிகப் பெரிய எரிமலை வெடித்துச் சிதறியது. அதில் இருந்து பரவிய நெருப்பு குழம்புகள், ஊருக்குள் புகுந்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் அங்கு ஆண்டுதோறும் நெருப்புப் பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொள்ளும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவை‌‌ இளைஞர்கள் பாதுகாப்புடன் கொண்டாடினர். வீதியில் ஒருவர் மீது ஒருவர் நெருப்புப் பந்துகளை‌ வீசியெறிந்து தாக்கிக் கொண்டது, பார்வையாளர்களை திகில் க‌லந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com