அமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்

அமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்
Published on

லாஸ்வேகாஸில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தான் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவமாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆர்லாண்டோவில் இரவு விடுதிக்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயி‌‌ழந்திருக்கின்றனர். விர்ஜினியாவில் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேரும், 2012 ஆம் ஆண்டில் சாண்டி ஹுக் தொடக்கப் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 26 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் 1991 ஆம் ஆண்டு டெக்சாஸ் விடுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 23 பேரும், 1984 ஆம் ஆண்டு கலிபோர்னியாவின் மெக்டொனால்டு விடுதிக்குள் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர். முதன் முதலாக 1966 ஆண்டு டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்குள் தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. அப்போது 16 பேர் உயிரிழந்‌தனர். இந்த சம்பவங்கள்தான் இதற்கு முன் அமெரிக்காவில்‌ நிகழ்ந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஆகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com