லாஸ் வேகாஸில் துப்பாக்கிச் சூடு: ஓட்டல் நிர்வாகம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு
பாதுகாப்பு ஏற்பாடுகளில் அலட்சியமாக நடந்து கொண்டதாக மண்டாலே பே ஓட்டல் மற்றும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது,
அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காஸ்பர் என்ற பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 1-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது எதிரே இருந்த மண்டாலே
பே ஓட்டலின் 32-வது மாடியில் இருந்து ஸ்டீஃபன் பட்டாக் என்பவர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 59 பேர்
உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களில் கலிபோர்னியாவைச் சேர்ந்த காஸ்பர் என்ற இளம் பெண்
நெவெடாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் மண்டாலே பே ஓட்டல் நிர்வாகம், இசை நிகழ்ச்சியின்
ஏற்பாட்டாளர்கள் மற்றும் துப்பாக்கி உற்பத்தி நிறுவனங்கள் அலட்சியமாக இருந்ததே இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என
குற்றம்சாட்டியுள்ளார்.